ADDED : ஆக 10, 2024 07:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: கடந்த ஜூலை, 21ம் தேதி மதுரை அவனியாபுரம் காவல் நிலைய பகுதியில், டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டி-ருந்தபோது ஏற்பட்ட தகராறில், மனோஜ் என்பவர் கொலை செய்-யப்பட்டார்.
இந்த வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வில்லாபுரத்தை சேர்ந்த கார்த்திகேயன், 25, அரிமணி, 22, செல்வ-குமார், 26, சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த கருப்பையா, 21, ஆகிய நான்கு பேர் நேற்று சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் சரண-டைந்தனர்.

