/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருநாதர் வனத்தில் உறையும் கற்சிலைகள்
/
குருநாதர் வனத்தில் உறையும் கற்சிலைகள்
ADDED : ஆக 10, 2024 07:42 AM
பவானி : அம்மன் சன்னதியில் காமாட்சியம்மன் தவநிலை எதிரில் சித்-தேஸ்வரன், மாதேஸ்வரன், அம்மனுக்கு வலது புறம் கீழே நவநா-யகிகள், கீழ்புறம் 7 கன்னிமார்கள்.
மகாவிஷ்ணு சந்நிதியில், பெருமாள் ராமர், லட்சுமணர், சீதை சிலைகளும், பரத சத்ருக்கள் சிலைகள், கீழ்புறம் ஆஞ்சநேயரும், எதிரில் கருடாழ்வாருடன் இருப்பதாக ஐதீகம்.
குருநாதர் குன்றாய் இருக்க, வலது புறம் பாட்டன், பாட்டி நாக தேவதையும் இடதுபுறம் தண்ட காருண்யர், தர்ப்பை அம்மன், எதிர்புறம் அண்ணமார் என்றும் முன்னுடையாரும், குருநாதருக்கு கீழ், 18 சித்தர்களுடன், மூதாதையர் மூவர் கற்சிலைகளும், இடது புறம் அகோர வீரபத்திரனும், எதிரில் உத்தண்ட முனிராய துரையும், அன்னப்பாறையும் காட்சி தருகிறது. அன்னப்பாறை ஓரம் பஞ்சபாண்டவர்கள் ஐவர் காட்சி தருகின்றனர்.

