/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சம்பளம் வழங்காமல் தாமதம் 'நான் முதல்வன்' திட்ட பயிற்றுனர் வருத்தம்
/
சம்பளம் வழங்காமல் தாமதம் 'நான் முதல்வன்' திட்ட பயிற்றுனர் வருத்தம்
சம்பளம் வழங்காமல் தாமதம் 'நான் முதல்வன்' திட்ட பயிற்றுனர் வருத்தம்
சம்பளம் வழங்காமல் தாமதம் 'நான் முதல்வன்' திட்ட பயிற்றுனர் வருத்தம்
ADDED : ஆக 20, 2024 02:33 AM
ஈரோடு: ஈரோடு, சேலம் உட்பட 5 மாவட்டத்தில், 'நான் முதல்வன்' திட்ட பயிற்றுனர்களுக்கு சம்பளம் வழங்கப்படததால் சிரமப்படுகிறோம் எனக்கூறி, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கினர்.
பயிற்றுனர் சுரேஷ்குமார் தலைமையில் மனு வழங்கி கூறியதாவது: தமிழக அரசின் சிறப்பு திட்டமான 'நான் முதல்வன்' திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம் மூலம் மாநில அளவில் நடத்தப்பட்டது. இதற்கு அமைப்புகள் மூலம், பயிற்றுனர்களை தேர்வு செய்து, கடந்த ஜன., முதல் மார்ச் வரை பயிற்சி வழங்கினர். பயிற்சி பெற்றவர்கள் மூலம், ஒவ்வொரு கல்லுாரியிலும் தலா, 9 முழு வேலை நாள் அல்லது, 18 பாதி நாட்கள் என்ற கணக்கில் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கினோம்.
ஈரோடு, திருப்பூர், சேலம், கோவை, நீலகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில், 150க்கும் மேற்பட்ட பயிற்றுனர்கள் உள்ளோம். மார்ச்சில் பயிற்சி முடித்து இதுவரை அரசின் திட்டப்படி தொடர்ந்து பயிற்சி வகுப்பு நடத்தி வந்துள்ளோம்.
இதற்கான போக்குவரத்து செலவு, உணவு, பயிற்சிக்கான உபகரணங்கள் எங்களுடையது. இதற்காக தினமும், 1,500 முதல், 2,000 ரூபாய் வரை ஊதியமாக நிர்ணயித்து, ஒரு பயிற்றுனருக்கு மாதம், 20,000 ரூபாய் முதல், 40,000 ரூபாய் வரை வழங்க வேண்டி உள்ளது. இதை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு மையம், தொடர்புடைய என்.ஜி.ஓ.,வுக்கு வழங்கி, அவர்கள் எங்களது வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும்.
சில மாவட்டங்களில் மட்டும், இத்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. ஈரோடு உட்பட, மாவட்டங்களில் வரவு வைக்காததால் பயிற்றுனர்களுக்கு, 40,000 ரூபாய் முதல், 1.20 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பாக்கி உள்ளது. இதற்கிடையில் தற்போது, 2ம் கட்ட பயிற்சிக்கு பயிற்றுனர்களை தேர்வு செய்துள்ளனர். அதில் பழைய நபர்களுக்கு வாய்ப்பு வழங்காத நிலையும் உள்ளது. பயிற்றுனர்களின் வாழ்வாதாரம் கருதி, முழு தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

