/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வீடுகள் மீது கல்வீச்சு சம்பவம் போலீசால் கிராமத்தில் சகஜ நிலை
/
வீடுகள் மீது கல்வீச்சு சம்பவம் போலீசால் கிராமத்தில் சகஜ நிலை
வீடுகள் மீது கல்வீச்சு சம்பவம் போலீசால் கிராமத்தில் சகஜ நிலை
வீடுகள் மீது கல்வீச்சு சம்பவம் போலீசால் கிராமத்தில் சகஜ நிலை
ADDED : ஜூலை 12, 2024 01:36 AM
காங்கேயம், காங்கேயத்தை அடுத்த ஒட்டபாளையத்தில், இரு வாரங்களுக்கும் மேலாக இரவில் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இதனால் கிராம மக்கள் பீதியடைந்து, அங்குள்ள கருப்பராயன் கோவிலில் தஞ்சமடைந்தனர். இதையறிந்த காங்கேயம் போலீசார், தினமும் இரவு காவலுக்காக இரண்டு போலீசாரை நியமித்து கண்காணித்தனர். காங்கேயம் தாசில்தார் மயில்சாமியும் ஆய்வு
மேற்கொண்டனர்.
இந்நிலையில் கடந்த மூன்று
நாட்களாக கல்வீச்சு சம்பவம் நடக்கவில்லை. இதனால் ஒட்டபாளையம் கிராமத்தில் சகஜ நிலை திரும்பி, மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். டி.எஸ்.பி., பார்த்திபன், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மக்களிடம் பேசி, உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.