/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
/
ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜூலை 03, 2024 09:06 AM
ஈரோடு, : ஆடி மாதம் பிறக்கவுள்ளதால், ஜவுளி சந்தையில் சில்லறை ஜவுளி விற்பனை அதிகரித்தது.
ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் கனி மார்க்கெட் நிரந்தர கடைகள், அதை ஒட்டிய பகு-தியில் வாரச்சந்தை கடைகள், டி.வி.எஸ்., வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு சாலை பகுதி, பனியன் மார்க்கெட் பகுதியிலும் நேற்று ஜவுளி சந்தை விற்பனை நடந்தது.
இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறிய-தாவது: கடந்த வாரங்களை ஒப்பிடுகையில் கடந்த ஞாயிறு முதல் ஆடி பிறப்புக்கான ஜவுளி சில்லறை விற்பனை உயர்ந்துள்ளது. ஜட்டி, பனியன், வேட்டி, துண்டு, நைட்டி, புடவை, பெட்ஷீட், குழந்தைகளுக்கான ஆடைகள் போன்-றவை விற்பனையானது.தமிழகத்தில் செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்-புரம், செஞ்சி உட்பட பல பகுதிகளில் இருந்து அதிகமாக வியாபாரிகள், மொத்த விற்பனையா-ளர்கள் வந்தனர். ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநில வியாபாரிகள், கடைக்காரர்கள் வந்தனர். ஆடி தள்ளுபடியில் விற்பனை செய்வ-தற்காக மொத்த விற்பனைக்கு வாங்கி சென்-றனர். நேற்று மொத்த விற்பனை, 20 சதவீதம் வரை நடந்தது. ஆடி பிறக்கும்போது தள்ளுபடி விற்பனைக்காக அதிகமாக விற்பனையாகும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு கூறினார்.