/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு மாவட்டத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
/
ஈரோடு மாவட்டத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாட்டம்
ADDED : ஆக 15, 2024 01:25 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில், சுதந்திர தினவிழா ஆணைக்கல்பாளையம் மாவட்ட போலீஸ் துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடக்க உள்ளது.
இன்று காலை, 9:05 மணிக்கு தேசிய கொடியை கலெக்டர் ராஜகோபால் சுன்கரா ஏற்றி வைத்து, போலீசார் அணிவகுப்பு மரியாதையை
ஏற்று கொள்கிறார். பின், பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த அரசு ஊழியர்கள், போலீசார், பொது அமைப்பினரை பாராட்டி சான்றிதழ் வழங்குகிறார். சுதந்திர போராட்ட தியாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். இறுதியாக பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சுதந்திர தினவிழாவுக்காக ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ரயில்வே மேம்பாலம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சோதனை சாவடிகளில் நேற்று முன்தினம் இரவு முதல், வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, மாவட்ட
எல்லைக்குள் அனுமதித்து வருகின்றனர்.