/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.4.29 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
/
ரூ.4.29 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
ADDED : செப் 04, 2024 09:11 AM
பவானி: பவானி அருகே ஒலகடம் டவுன் பஞ்.,ல் பெருமாள் கோவில் வீதியில், ௧.௨௫ கோடி ரூபாய் மதிப்பில், புது டவுன் பஞ்., அலுவலகம் கட்டடம், ௧.௫௪ கோடி ரூபாய் மதிப்பில் வாரச்-சந்தை மேம்பாடு, மும்மிரெட்டிபாளையம் முதல் நாகிரெட்டிபாளையம் வரை, 81 லட்சம் ரூபாய் மதிப்பில் சேதமான சாலைகளை புதுப்பித்தல், அண்ணாநகர் முதல் குன்றியூர் வரை, 69 லட்சம் ரூபாய் செலவில் சாலை புதுப்பித்தல் என, 4.29 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆயர்த்-தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி, பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், ஒலகடம் டவுன் பஞ்., தலைவர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.