/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரதிதாசன் கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
/
பாரதிதாசன் கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
பாரதிதாசன் கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
பாரதிதாசன் கலை கல்லுாரியில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ADDED : ஜூலை 06, 2024 06:08 AM
ஈரோடு: ஈரோடு, எல்லீஸ்பேட்டை, பாரதிதாசன் கலை அறிவியல் கல்-லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.
முதல் நாள் நடந்த நிகழ்வுக்கு கல்லுாரி தாளாளர் பெரியசாமி தலைமை வகித்தார். கல்லுாரி பொருளாளர் முருகன் தொடக்க-வுரையாற்றினார். கல்லுாரி முதல்வர் வானதி, உடல்நலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். போனிக்ஸ் பயிற்சி நிறுவனத்தின் தன்னம்பிக்கை பேச்சாளர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். இரண்டாம் நாள் நிகழ்வில் சேலம் சவுடேஸ்வரி கல்லுாரி வணிகவியல் துறை உதவி போராசிரியர் செங்கோட்டுவேல், மூன்றாம் நாள் நிகழ்வில் காங்கேயம் வணிகவியல் நிறுவன வணிக பகுப்பாய்வியல் துறை தலைவர் நல்லசிவம் பேசினார்.
கல்லுாரி செயலர் நரேன் ராஜா வாழ்த்துரை வழங்கினார். துணை தலைவர்கள் சத்யன், ராஜா, இணை செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா, நிர்வாக அலுவலர் அருள்குமரன் முன்-னிலை வகித்தனர்.