/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயத்தில் விடியும்போதே 'சரக்கு' விற்பனை கள்ளக்குறிச்சி போல் விபரீதம் நடக்க வாய்ப்பு?
/
காங்கேயத்தில் விடியும்போதே 'சரக்கு' விற்பனை கள்ளக்குறிச்சி போல் விபரீதம் நடக்க வாய்ப்பு?
காங்கேயத்தில் விடியும்போதே 'சரக்கு' விற்பனை கள்ளக்குறிச்சி போல் விபரீதம் நடக்க வாய்ப்பு?
காங்கேயத்தில் விடியும்போதே 'சரக்கு' விற்பனை கள்ளக்குறிச்சி போல் விபரீதம் நடக்க வாய்ப்பு?
ADDED : ஜூலை 06, 2024 07:05 AM
காங்கேயம் : காங்கேயத்தில் விடியும் நேரத்திலேயே சரக்கு விற்பனை கன ஜோராக நடக்கிறது. இது கள்ளச்சாராயமா அல்லது டாஸ்மாக் சரக்கா? என மக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில், 12 அரசு டாஸ்மாக் கடை செயல்படுகிறது. அதேசமயம் சட்ட விரோதமாக பல நுாறு சந்துக்கடைகளில் மது விற்பனை, ௨௪ மணி நேரமும் ஜோராக நடக்கிறது. போலீசாரும் பெயரளவுக்கு வழக்குப்பதிவு செய்து, தங்கள் பங்கு மாமூலை தடையின்றி பார்த்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில் காங்கேயத்தில் பல இடங்களில் காலை, 6:00 மணிக்கே சட்டவிரோத சரக்கு விற்பனை நடக்கிறது. குறிப்பாக காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள வாரச்சந்தை வளா-கத்தை ஒட்டி டாஸ்மாக் கடை உள்ளது. இங்குதான் தடையின்றி மது விற்பனை நடந்து வருகிறது. குடிமகன்கள் சரக்கு வாங்கிய-வுடன் சந்தை வளாகத்துக்கு சென்று குடிக்கின்றனர். காலி பாட்-டில்களை அங்கேயே உடைத்தும், வீசியும் செல்கின்றனர். சந்-தைக்கு விவசாயிகள், வியாபாரிகள், பெண்கள் என, ஆயிரத்-துக்கும் மேற்பட்டோர் வந்து செல்லும் இடம் என்பதை மறந்து குடிமகன்கள் அவ்வப்போது தகாத வார்தை பேசி சண்டையிடு-கின்றனர். இதனால் அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக உள்-ளது. குடித்து விட்டு பலர் டூவீலர்களில் தாறுமாறாக சாலைகளில் பறக்கின்றனர். இதனால் குடிக்காத பலர் விபத்தை சந்திக்க நேரி-டுகிறது. காங்கேயத்தில் காலை, 6:00 மணிக்கே கூடாரமிடும் குடி-மகன்களால், பெண்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாக தரப்பில், காங்கேயம் போலீசாருக்கு புகார் தெரி-வித்தும் நடவடிக்கை இல்லை. இரு தினங்களுக்கு முன் வெள்ள-கோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி, டாஸ்மாக் பாட்டிலில் அடைத்து விற்றது தெரியவந்தது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பல ஆண்டுகளாக இந்த விற்பனை நடந்த நிலையில், போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்-ளனர்.
மொத்தத்தில் காங்கேயத்தில் காலை நேரத்தில் விற்கப்படும் சரக்கு, டாஸ்மாக் சரக்கா அல்லது கள்ளச்சாராயாமா? அல்லது கள்ளச்சாராயத்தில் டாஸ்மாக் சரக்கு கலந்து விற்கப்படுகிறதா? என மக்களுக்கு பல்வேறு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி போல் காங்கேயத்திலும் விபரீதம் நடக்கும் என அச்சம் எழுந்துள்ளது. அதற்கும் முன்னதாக உறங்கும் போலீசார் விழித்து உரிய நடவடிக்கை எடுப்பார்களா? என்பதுதான் மக்கள் மத்தியில் தற்போது கேள்வி எழுந்துள்ளது.