/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'பயன்பாட்டுக்கு வர இன்னும் ௩ மாதமாகும்' 'வாய்தா' பஸ் ஸ்டாண்டாக மாறுதா சோலார்?
/
'பயன்பாட்டுக்கு வர இன்னும் ௩ மாதமாகும்' 'வாய்தா' பஸ் ஸ்டாண்டாக மாறுதா சோலார்?
'பயன்பாட்டுக்கு வர இன்னும் ௩ மாதமாகும்' 'வாய்தா' பஸ் ஸ்டாண்டாக மாறுதா சோலார்?
'பயன்பாட்டுக்கு வர இன்னும் ௩ மாதமாகும்' 'வாய்தா' பஸ் ஸ்டாண்டாக மாறுதா சோலார்?
ADDED : செப் 08, 2024 01:01 AM
ஈரோடு, செப். 8-
சிப்காட், அத்திக்கடவு - அவிநாசி திட்டம், சோலார் மற்றும் சத்தி சாலை பஸ் ஸ்டாண்ட் குறித்து உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில், ஈரோட்டில் நடந்தது. ஆய்வுக்குப்பின் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: அத்திக்கடவு - அவிநாசி திட்ட பயன்பாடு, அதில் உள்ள சிக்கல் குறித்து பேசினோம்.
கடந்த, 17 ல் முதல்வர் துவக்கி வைத்தது முதல் தற்போது வரை, 21 நாளில், 10 நாள் மட்டும் உபரி நீர் கிடைத்து, செலுத்த முடிந்தது. இந்த, 10 நாளில் மொத்தமுள்ள, 1,045 குளங்களில், 746 குளங்களுக்கு தண்ணீர் போய் சேர்ந்துள்ளது. தண்ணீர் வரவர மீதி குளங்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாயக்கழிவு வெளியேற்றம் தொடர்பாக, ஆலை நிர்வாகத்தினரை அழைத்து பேசியுள்ளோம். அவர்களுக்கான சிக்கல் பற்றி பேசினர். இருந்தாலும், எக்காரணத்திலும் சுத்திகரிக்காத தண்ணீரை வெளியேற்றக்கூடாது என கூறியுள்ளோம். மீறி வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளோம்.
அச்சங்கத்தை சேர்ந்தவர்கள், அதுபோன்ற நடவடிக்கை இருக்கக்கூடாது என தெளிவாக உள்ளனர். ஓரிரு நாளில், தொடர்புடைய துறை அதிகாரிகளிடம் தேவை, நிரந்தர தீர்வு குறித்து பேசவுள்ளனர். ஈரோட்டில் ஐந்து இடங்களில் கழிவு நீர் சுத்திகரிப்பு பிளாண்ட் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. வேறு ஒரு திட்டமும் பேசி உள்ளோம். அதுபற்றி அரசிடம் பேசிவிட்டு தெரிவிக்கிறோம். சிப்காட்டில், 2 வாரத்துக்குள் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய அமைக்கும் பணி டெண்டர் விடப்பட்டு, பணி துவங்கப்படும்.
சிப்காட்டில் திடக்கழிவு, 63,000 டன் வரை தேங்கி இருந்தது. கடந்த மார்ச் முதல் ஆக., வரை, 8,551 டன் திடக்கழிவு, ராமநாதபுரத்தில் உள்ள ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சோலார் பஸ் ஸ்டாண்ட் பணி நடந்து வருகிறது. சில தொய்வுகள் இருந்தது. தேவையான ஏற்பாடு செய்யப்பட்டு, 2 அல்லது 3 மாத காலத்தில் பயன்பாட்டுக்கு வரும். சத்தி சாலையில் ஒரு பஸ் ஸ்டாண்ட் அமைக்க, 13.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்த சில சிக்கல் இருந்தது. உரியவர்களிடம் பேசி தீர்வு காணப்பட்டதால், விரைவாக பணிகள் துவங்கப்படும்.