/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கோபி ஆர்.டி.ஓ.,விடம் கலிங்கியம் மக்கள் மனு
/
கோபி ஆர்.டி.ஓ.,விடம் கலிங்கியம் மக்கள் மனு
ADDED : செப் 06, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி ஆர்.டி.ஓ.,விடம்
கலிங்கியம் மக்கள் மனு
கோபி, செப். 6-
கோபி அருகே கலிங்கியம் பஞ்சாயத்தை சேர்ந்த சிலர், கோபி ஆர்.டி.ஓ., கண்ணப்பனை சந்தித்து நேற்று மனு கொடுத்தனர். மனு விபரம்: கலிங்கியம் பஞ்., சென்னியப்பா நகர் பகுதியில் செல்லும் கீரிப்பள்ள ஓடையில், திடக்கழிவுகளை கொட்டி தீ வைப்பதால், மூச்சுத்திணறல் ஏற்படுகிறது.
இதனால் ஓடையை சுற்றியுள்ள பகுதியில், நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. நிலத்தடி நீராதாரம், மக்களின் உடல் நலத்தை காக்கும் விதமாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில்
தெரிவித்துள்ளனர்.