/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணை 2வது நாளாக மூடல்
/
கொடிவேரி தடுப்பணை 2வது நாளாக மூடல்
ADDED : ஆக 04, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
?கோபி,
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்படும் நிலை இருந்ததால், கடந்த, 2ம் தேதி முதல் இன்று (ஆக.,4ம் தேதி) வரை, மூன்று நாட்களுக்கு கொடிவேரி தடுப்பணையை தற்காலிகமாக மூட, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவிட்டார்.
நேற்று ஆடிப்பெருக்கு என்பதால், கடத்துார் போலீசார், கொடிவேரி அணை பிரிவில் முகாமிட்டிருந்தனர். தடுப்பணைக்கு வந்த சுற்றுலா பயணிகளை, நுழைய அனுமதியில்லை என போலீசார் அறிவுரை கூறி திருப்பி அனுப்பினர். தடை உத்தரவால் கொடிவேரி தடுப்பணை வளாகம், பரிசல் துறை மற்றும் சிறுவர் பூங்கா என நேற்றும் வெறிச்சோடியது.