/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
/
பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஆக 24, 2024 01:23 AM
பவளமலை முத்துக்குமாரசாமி
கோவிலில் கும்பாபிஷேக விழா
கோபி, கோபி பவளமலை முத்துக்குமாரசாமி கோவிலின் கும்பாபிேஷக விழா, கடந்த, 19ல் துவங்கியது. நேற்று அதிகாலை ஆறாம் கால யாக வேள்வி நடந்தது. காலை, 6:30 மணிக்கு, பரிவார யாகசாலை பூர்ணாகுதி, 7:30 மணிக்கு அடிவாரத்தில் உள்ள முத்து விநாயகர், மயில் வாகனம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. காலை, 8:30 முதல், 9:30 மணிக்குள், அனைத்து விமானம், ராஜகோபுரம் மற்றும் மூலவர் விமானம் வரை, வேதமந்திரம் முழங்க புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதனால் கோபி முருகன்புதுார் பஸ் ஸ்டாப்பில் இருந்து, பவளமலை முருகன் கோவிலின் மலை அடிவாரம் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மலைக்கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.