/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
/
ராகவேந்திரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
ADDED : ஜூலை 02, 2024 06:27 AM
ஈரோடு : ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் உள்ள ராகவேந்-திரர் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று வெகு விமரி-சையாக நடந்தது.
முன்னதாக நேற்று முன்தினம் பல்வேறு மந்திர ஹோமங்கள், வேத பாராயணம், ஸ்தோத்திர பாராயணம், மகா தீபாராதனை நடந்தது.
நேற்று அதிகாலை, 5:௦௦ மணிக்கு, பிரதிஷ்டா ஹோம்பூர்த்தி, நாடி சந்தனம், மகா பூர்ணாகுதி, மந்திர புஷ்பம் உள்ளிட்ட ஹோமங்கள் நடந்தன. காலை, 6:30 மணிக்கு, ராகவேந்திர சுவா-மிகள் மிருத்திகா பிருந்தாவனத்துக்கு மகா கும்பாபிஷேகம் நடந்-தது. மந்தராலய ராகவேந்திர சுவாமி மடத்தின் அதிபரான ஸ்ரீஸ்ரீ 1008 ஸூபுதேந்த்ர தீர்த்தஸ்ரீ பாதங்களவர்கள், கோபுர கலசத்-துக்கு புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.