ADDED : ஆக 17, 2024 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பகுதியில் ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடம், ஈரோடு மற்றும் கோபி சொசைட்டி என, 4 இடங்களில் திங்கள் முதல் வெள்ளி கிழமை வரை மஞ்சள் ஏல விற்பனை நடக்கிறது.
நாளை மறுதினம் (19ம் தேதி) ஆவணி அவிட்டம், ரக்சா பந்தன் கொண்டாடப்படுவதால் மஞ்சள் வர்த்தகத்துக்கு விடுமுறை அளிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மஞ்சள் ஏலக்கூடங்களிலும் ஏலம் நடக்காது. 20ம் தேதி வழக்கம்போல் ஏலம் நடக்கும்.