ADDED : மே 05, 2024 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:சென்னிமலை-ஊத்துக்குளி
சாலையில், தொட்டம்பட்டி பிரிவில், சேலம் கனிம வளத்துறை பறக்கும் படை
அதிகாரி சரவணன் தலைமையில் வாகன சோதனை நடந்தது.
ஒரு டிப்பர் லாரியை
சோதனை செய்ததில், ஐந்து யூனிட் செம்மண் இருந்தது. ஆனால், உரிய
ஆவணமில்லை. இதனால் கடத்திச் செல்லப்பட்ட மண்ணுடன் லாரியை பறிமுதல்
செய்து, சென்னிமலை போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில்
லாரியை ஒட்டி வந்தது திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகேயுள்ள
சக்கரப்பாளையத்தை சேர்ந்த மணிவாசன், 43, என்பது தெரிந்தது. அவர்
மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், லாரி உரிமையாளரை தேடி
வருகின்றனர்.