/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிறுபாலம், நடுத்தர பாலம் கொடுமுடியில் பராமரிப்பு
/
சிறுபாலம், நடுத்தர பாலம் கொடுமுடியில் பராமரிப்பு
ADDED : ஆக 13, 2024 05:52 AM
கொடுமுடி: கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தில் சிறுபாலங்கள் மற்றும் நடுத்தர பாலங்களின் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.
பருவமழை தொடங்கவுள்ளதால் மழை காலத்துக்கு முன் நெடுஞ்சாலைகளில் உள்ள சிறுபாலம் மற்றும் நடுத்தர பாலங்களில் வெள்ள நீர் தடையின்றி செல்ல பராமரிப்பு பணி மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி கொடுமுடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட அரச்சலுார், சிவகிரி, அம்மன்கோயில், பாசூர், கொளாநல்லி, வள்ளிபுரம், வீரசங்கிலி, வெள்ளோட்டம்பரப்பு, ஊஞ்சலுார், நடுப்பாளையம், அன்னமார்கோயில், கந்தசாமிபளையம், தம்பிரான்வலசு, ஆயப்பரப்பு உள்ளிட்ட கிராம சாலைகளில் உள்ள, 398 சிறுபாலங்கள் மற்றும் நடுத்தர பாலங்கள் துார்வாரப்பட்டு, அடைப்பு அகற்றப்பட்டன. பாலத்தின் தடுப்பு சுவர்களுக்கு வெள்ளை அடிக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

