/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அமைச்சர் உதயநிதி இன்று ஈரோடு வருகை ரூ.7.57 கோடியிலான மைதானம் நாளை திறப்பு
/
அமைச்சர் உதயநிதி இன்று ஈரோடு வருகை ரூ.7.57 கோடியிலான மைதானம் நாளை திறப்பு
அமைச்சர் உதயநிதி இன்று ஈரோடு வருகை ரூ.7.57 கோடியிலான மைதானம் நாளை திறப்பு
அமைச்சர் உதயநிதி இன்று ஈரோடு வருகை ரூ.7.57 கோடியிலான மைதானம் நாளை திறப்பு
ADDED : ஆக 01, 2024 02:15 AM
ஈரோடு: ஈரோட்டுக்கு இன்று வருகை புரியும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, நாளை, 7.57 கோடி ரூபாயில் புனரமைக்கப்-பட்ட, வ.உ.சி., பூங்கா விளையாட்டு மைதானத்தை திறந்து வைக்க உள்ளார்.
இதுபற்றி, ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், வீட்டு வசதித்துறை அமைச்சருமான முத்துசாமி வெளியிட்ட அறிக்-கையில் கூறியிருப்பதாவது: விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி, இன்று திருச்சி மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளில்பங்-கேற்றுவிட்டு, இரவில் ஈரோடு வந்தடைகிறார். ஆக., 2ல் சோலார் ரவுண்டானா அருகே, ஈரோடு எம்.பி., அலுவலகம் திறப்பு விழா, வ.உ.சி., பூங்காவில், 7.57 கோடி ரூபாயில் புனர-மைக்கப்பட்ட விளையாட்டு மைதானம் திறப்பு, ஆர்.என்.புதுார் பிளாட்டினம் மஹாலில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
பின், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் உள் விளை-யாட்டு அரங்கை திறந்து வைத்து, 'நான் முதல்வன்', 'புது-மைப்பெண்' திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடுகிறார். பின்னர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, மேட்-டுக்கடை தங்கம் மஹாலில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். பின், கோவை சென்று விமானம் மூலம் சென்னை சென்றடைகிறார். இந்நிகழ்ச்சிகளில் அனைத்து நிலை நிர்வா-கிகள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறி-யுள்ளார்,
தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலரும், ஈரோடு எம்.பி.,யுமான பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப-தாவது: ஈரோடு எம்.பி., தொகுதி அலுவலகம், இரணியன் வீதி, கரூர் பைபாஸ் சாலை, மாணிக்கவாசகர் காலனி என்ற முகவ-ரியில் நாளை (ஆக. 2) காலை, 10:00 மணிக்கு திறக்கப்படுகிறது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமை வகிக்கிறார். புதிய அலுவலகத்தை, தி.மு.க., இளைஞரணி செயலரும், விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி திறந்து வைக்-கிறார். அமைச்சர்கள் சாமிநாதன், மதிவேந்தன், கயல்விழி செல்-வராஜ், எம்.எல்.ஏ., இளங்கோவன், எம்.பி., அந்தியூர் செல்-வராஜ், மாவட்ட செயலர்கள் இல.பத்மநாபன், மதுரா செந்தில், நல்லசிவம், மேயர் நாகரத்தனம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்-றனர். தவிர அனைத்து நிலை நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு தெரிவித்துள்ளார்.