/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கருவேல மரங்கள் ரூ.5.16 லட்சத்துக்கு ஏலம்
/
கருவேல மரங்கள் ரூ.5.16 லட்சத்துக்கு ஏலம்
ADDED : ஜூலை 04, 2024 08:43 AM
சென்னிமலை, : சென்னிமலை அருகே ஒரத்துப் பாளையம் அணை உள்ளது. திருப்பூர் சாய ஆலை சுத்திகரிப்பு செய்யாத கழிவு நீர், அணையில் தேங்கி அந்த பகுதியில் நிலத்தடி நீர் கெட்டு வரும் சூழ்நிலையில், உயர்நீதிமன்-றத்தில் விவசாயிகள் வழக்கு தொடர்ந்தனர். அதை தொடர்ந்து ஐகோர்ட்டு உத்தரவுபடி, 15 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீரை தேக்கி வைக்காமல் அணைக்கு வரும் தண்ணீர், நொய்யல் ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகி-றது. இதனால் நீர்த்தேக்க பகுதியான அணை பகு-திக்குள் சீமை கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து வந்தது.
இதனை நீர்வளத்துறை மூலம் ஏலம் விடப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று ஒரத்துப்பா-ளையம் அணையின் நீர் தேக்க பகுதியின் வலது கரையில் உள்ள, 244 ஹெக்டேர் பரப்பளவில் வளர்ந்துள்ள சீமை கருவேல முள் மரங்களை வேருடன் அகற்றி கொள்வதற்கு, சென்னிமலை பாசன பிரிவு அலுவலகத்தின் நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் (காங்கேயம்) சதீஷ்-குமார், உதவி பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் முன்னிலையில் பொது ஏலம் நடை-பெற்றது. அப்போது, 64 பேர் ஏற்கனவே நிர்ண-யிக்கப்பட்டிருந்த முன் வைப்பு தொகையான, 1 லட்சத்து, 29 ஆயிரத்து 815 ரூபாய் செலுத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். இதில் அதிகபட்ச-மாக, ஐந்து லட்சத்து, 16 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்தவர் மூன்று மாதத்திற்குள் முள் செடிகளை முழுமையாக அகற்றிக் கொள்ள நீர் வளத்துறை மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது.