/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பசுமாட்டை கொன்ற சிறுத்தை கோடேபாளையத்தில் அச்சம்
/
பசுமாட்டை கொன்ற சிறுத்தை கோடேபாளையத்தில் அச்சம்
ADDED : ஜூலை 02, 2024 06:29 AM
பவானிசாகர் : பவானிசாகரை அடுத்த கோடேபாளையத்தை சேர்ந்தவர் சிவராஜ், 62; விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள தோட்டத்தில் நான்கு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் கொட்டகையில் மாடுகளை கட்டியிருந்தார். நேற்று காலை பால் கறக்க சிவராஜ் சென்றபோது ஒரு பசு மாட்டை காணாமல் அதிர்ச்சி அடைந்தார். அதை தேடிச் சென்றபோது வனப்பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்தது. தகவலின்படி விளாமுண்டி ரேஞ்சர் கணேஷ் பாண்டியன் தலைமையிலான வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சிறுத்தையின் கால் தடம் பதிவாகி இருந்ததை கண்டறிந்தனர். இதனால் அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது: தானியங்கி கேமரா பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து, கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறுத்தை தாக்கி பசு-மாடு பலியானதால் விவசாயிக்கு உரிய நிவாரணம் வழங்கப்-படும். இவ்வாறு கூறினர்.