/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கல்லுாரி, பள்ளி மாணவியர் மாயம் பெற்றோர் போலீசில் புகார்
/
கல்லுாரி, பள்ளி மாணவியர் மாயம் பெற்றோர் போலீசில் புகார்
கல்லுாரி, பள்ளி மாணவியர் மாயம் பெற்றோர் போலீசில் புகார்
கல்லுாரி, பள்ளி மாணவியர் மாயம் பெற்றோர் போலீசில் புகார்
ADDED : ஜூலை 18, 2024 01:19 AM
ஈரோடு: வெள்ளோடு பெருந்துறை ஆர்.எஸ்.செம்மாண்டாம் பாளை-யத்தை சேர்ந்த இளங்கோவன்-காயத்ரி மகள் கவுசிகா, 19. இளங்கோவன், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள ஓட்டலில் வேலை செய்கிறார். காயத்ரி பெருந்துறை இன்ப்ரா டெக்ஸ் டெய்லர். கவுசிகா நந்தா கலை அறிவியல் கல்லுாரியில் முதலாமாண்டு பி.ஏ. சைக்காலஜி படிக்கிறார்.
கடந்த, 15 காலை கல்லுாரிக்கு பஸ்சில் சென்ற கவுசிகா வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தகவல் இல்லை. மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என்று காயத்ரி அளித்த புகாரின் படி, ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதே போல் மலையம்பாளையம் கிழக்கு ஹரிஜன காலனி கரு-மாண்டாம்பாளையம் சங்கரன் மகள் பரணி, 17. சங்கரன் கொளா-நல்லி பஞ்சாயத்தில் துாய்மை பணியாளர். பரணி, கணபதிபா-ளையம் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 15 காலை பள்ளிக்கு செல்வதாக பள்ளி சீருடையுடன் வீட்டில் இருந்து கிளம்பி சென்றார். இரவாகியும் வீடு திரும்ப-வில்லை. சங்கரன் பள்ளிக்கு சென்று விசாரித்த போது பள்-ளிக்கு பரணி வரவில்லை என தெரியவந்தது. நண்பர்கள், உறவி-னர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தும் பரணி குறித்து தகவல் இல்லை.
சங்கரன் அளித்த புகாரின் படி மலையம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.