/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு
/
நகராட்சியுடன் இணைக்க நல்லுார் மக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 16, 2024 01:03 AM
பு.புளியம்பட்டி, :புன்செய் புளியம்பட்டியை அடுத்த நல்லுார் பஞ்., கிராமசபை கூட்டம், புதுப்பாளையம் அரசு பள்ளி முன் நேற்று காலை நடந்தது. தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். மக்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பஞ்., பகுதிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து செயலர் சம்பத் அறிக்கை வாசித்தார். அடிப்படை வசதி செய்து தரக்கோரி, தலைவரிடம் மக்கள் மனு வழங்கினர். கிராமசபை ஒப்புதல் இல்லாமல் நல்லுார் பஞ்சாயத்தை, புன்செய்புளியம்பட்டி நகராட்சியுடன் இணைக்க கூடாது. பஞ்.,ல் குடிநீர் தட்டுப்பாடு உள்ளதால் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

