/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காங்கேயம் பகுதியில் பலத்த வெடி சத்தம் பொருட்கள் அதிர்வால் பொதுமக்கள் பீதி

ADDED : ஆக 10, 2024 07:46 AM
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பகுதியில் நேற்று காலை, 10:02 மணியளவில் திடீரென, பயங்கர வெடி சத்தம் கேட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
இந்த சத்தத்தால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் அதிர்ந்தன. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சத்தம் கேட்ட திசையில் வசிப்பவர்கள், உறவினர்களுக்கு போன் செய்து கேட்டபடி இருந்தனர். அவர்-களும் தங்களுக்கும் இந்த சத்தம் கேட்டதாக கூறியதையடுத்து பீதியடைந்தனர். 10 வினாடிகள் வரை சத்தம் கேட்டுள்ளது. இதேபோல், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு, மூன்று முறை பலத்த வெடி சத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆனால், எந்த இடத்திலிருந்து வெடி சத்தம் வந்தது என்பது மட்டும் தெரியவில்லை. கிரஷர்களில் வெடி வைத்து பாறைகளை உடைக்கும் போது ஏற்படும் சத்தத்தை விட, பல மடங்கு சத்தம் கேட்டுள்ளது. சிவன்மலை, படியூர் மற்றும் சுற்று வட்டார கிரா-மங்கள் வரை, அதாவது 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெடி சத்தம் கேட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடி-யாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கூறுகின்றனர்.