/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு
/
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு
புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் வைக்க தடை விதிப்பு
ADDED : ஆக 31, 2024 01:50 AM
புன்செய்புளியம்பட்டி: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, புன்செய்புளியம்-பட்டி பஸ் ஸ்டாண்ட் முன், இந்து முன்னணி சார்பில் சில தினங்-களுக்கு முன், பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
நகராட்சியில் பணம் செலுத்தி உரிய அனுமதி பெற்று வைக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு பேனர்களை, நகராட்சி அலு-வலர்கள் அகற்றி அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனால் இந்து முன்னணி நிர்வாகிகள், நகராட்சி அலுவலகத்-துக்கு சென்று,
அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையறிந்து சென்ற புளியம்பட்டி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் முன் அரசியல் கட்சி, அமைப்புகள் உள்ளிட்ட யாருக்கும் பிளக்ஸ் பேனர்
வைக்க அனு-மதி இல்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இதைய-டுத்து பஸ் ஸ்டாண்ட் முன் பிளக்ஸ் பேனர் வைக்க தடை விதித்து நேற்று அறிவிப்பு செய்யப்பட்டது.