/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.40 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை
/
ரூ.3.40 லட்சத்துக்கு பொருட்கள் விற்பனை
ADDED : ஆக 08, 2024 06:44 AM
ஈரோடு: மொடக்குறிச்சி உபஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு, 7,779 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ தேங்காய், 27.63 முதல், 31.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 3,057 கிலோ எடை கொண்ட தேங்காய், 90 ஆயி-ரத்து, 103 ரூபாய்க்கு விற்பனையானது. அதுபோல, 106 மூட்டை கொப்பரை தேங்காய் விற்பனைக்கு வந்தது. முதல் தரம் கொப்-பரை தேங்காய் ஒரு கிலோ, 88.09 முதல், 97.60 ரூபாய் வரை-யிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 76 முதல், 93.04 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 2,735 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், இரண்டு லட்சத்து, 50 ஆயிரத்து, 882 ரூபாய்க்கு விலை போனது. தேங்காய், கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, மூன்று லட்சத்து, 40 ஆயிரத்து, 985 ரூபாய்க்கு விற்பனையானது.