/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
/
பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
ADDED : ஆக 31, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், மாதவி வீதியை சேர்ந்த ரவிச்சந்திரன்-மகன் ராஜ்குமார், 24; சென்னிமலை தனியார் பஞ்சு மில் சூப்பர்வைசர். சென்னிமலை, பொறையங்காட்டை சேர்ந்த வடிவேல் மகள் சூர்யா, 23;
பனியன் நிறுவன ஊழியர். இருவரும் நான்கு ஆண்டாக காதலித்து வருகின்றனர். திருமணத்-துக்கு இரு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இருவரும் நேற்று கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பாதுகாப்பு கேட்டு
சென்னிமலை போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் இருவரின் பெற்றோர்களையும் அழைத்து பேசினார். இதில் மணமகன் வீட்டாருடன், புது மண தம்பதியை அனுப்பி வைத்தார்.