/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து
/
அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து
அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து
அகற்றப்பட்ட வேகத்தடையால் பெருந்துறையில் தொடர் விபத்து
ADDED : பிப் 15, 2025 05:40 AM
பெருந்துறை: ஈரோட்டில் கடந்த, 2024 டிச.,20ம் தேதி நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக சென்-னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்தவர், அங்கிருந்து காரில் பெருந்துறை வழியாக ஈரோடு சென்றார்.
இதனால் பெருந்-துறை நகரில் கோட்டை முனியப்பன் கோவில் அருகில், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், பெருந்துறை டவுன் பஞ்., அலுவலகம் அருகில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த வேகத்தடைகளை நெடுஞ்சாலை துறையினர் இடித்து அகற்றினர். இரண்டு மாதம-மாகியும் வேகத்தடை அமைக்கவில்லை. இதனால் டூவீலர்களில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். கனரக வாகனங்-களும் விபத்தில் சிக்குவது அவ்வப்போது நடக்கிறது. நெடுஞ்சா-லைத்துறை நிர்வாகம், மெத்தனத்தை தொடராமல், பெரிய அளவில் விபத்து நடக்கும் முன், வேகத்தடைகளை மீண்டும் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.