ADDED : ஆக 24, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்தவர் முகமது தவ்பிக், 27; தாராபுரத்தை அடுத்த ருத்ராவதியில் உள்ள கோழிப்பண்ணை நிறு-வனத்துக்கு, கோழிகளை ஏற்றி செல்ல நேற்று முன்தினம் வந்தார்.
நிறுவனத்தின் முன் வேனை நிறுத்தி விட்டு அதன் முன் நின்றிருந்தார். அப்போது மதுரையை சேர்ந்த அருணாச்சலம், அவரது மனைவி விசாலாட்சி, ஹோண்டா சி.ஆர்.வி. சொகுசு காரில் வந்தனர். கட்டுப்பாட்டை இழந்த கார் வேன் மீது மோதி-யது. வேன் நகர்ந்து முகமது தவ்பிக் மீது மோதி, வேறொரு வேனில் மோதியது. இதில் படுகாயமடைந்த முகமது தவ்பிக், தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார். குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

