/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை
/
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை
கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை
ADDED : ஆக 14, 2024 01:45 AM
ஈரோடு: கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, ஈரோடு மாவட்ட நிர்வாகம், அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்காலில், அட்டவணைப்படி ஆக.,15ல் தண்ணீர் திறக்கப்-பட வேண்டும். இதன் மூலம், ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்-டங்களில், 1.03 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
வாய்க்காலில் தற்போது சீரமைப்பு பணி நடந்து வருகிறது. அதே-சமயம் சில வாரங்களுக்கு முன் அணையில் நீர்மட்டம் மிக குறை-வாக இருந்தது. அணை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், அணை நீர்மட்டம், 96 அடியை கடந்துள்ளது. இதற்கிடையே வாய்க்காலில் சீரமைப்பு பணிகளை முடித்தவரை நிறைவு செய்து-விட்டு, ஆக.,15ல் வழக்கம்போல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க, விவசாயிகள் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுவது பற்றி, நீர் வளத்துறை மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக இன்று மதியத்துக்கு மேல் தண்ணீர் திறப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டு, நாளை மாலை தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.