/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி
ADDED : ஆக 19, 2024 02:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஆசனுார் அருகேயுள்ள கீழ்மாவள்ளம் மலை கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மகாதேவன் மகள் அகல்யா, 7; இரண்டாம் வகுப்பு மாணவி. நேற்று முன்தினம் மாலை குழந்தைகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது பக்கத்து வீட்டின் தரைமட்ட தண்ணீர் தொட்டியில் அகல்யா தவறி விழுந்ததில் இறந்தார். சத்தி அரசு மருத்துவமனைக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

