/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி
/
மாநகராட்சி 28வது வார்டில் சாக்கடை துார்வாரும் பணி
ADDED : ஜூலை 02, 2024 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : பருவமழை பெய்யும் போதெல்லாம், மாநகராட்சி, 28வது வார்-டுக்கு உட்பட்ட முனிசிபல் காலனி பகுதி கடுமையாக பாதிக்கும். குறிப்பாக சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டு, மழை நீருடன் சேர்ந்து கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடும்.
தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, முனிசிபல் காலனி பகுதியில், மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்-டனர். இந்நிலையில் முனிசிபல் காலனி முதல் பெரிய வலசு வரை இருபுறமும் சாக்கடை கால்வாயை துார்வாரும் பணியில், ௫௦க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் நேற்று
ஈடுபட்டனர்.