ADDED : ஆக 31, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, வில்லரசம்பட்டி, அடுக்குபாறை பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், 23; தனியார் கல்லுாரியில் மூன்றாமாண்டு பட்டப்ப-டிப்பு படித்து வருகிறார். கடந்த, 26ல் கோவிலுக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை.
அவரது மொபைல் போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. தந்தை செட்டி புகா-ரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.* கவுந்தப்பாடி அருகே சலங்கபாளையத்தை சேர்ந்தவர் விஷ்ணு பிரியா, 21; இவரின் கணவர் கோபால், 30; கருத்து வேறு-பாட்டால் கணவரிடம் கோபித்து கொண்டு, நான்கு மாதமாக கவுந்தப்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில்
வசித்தார். நேற்று முன்தினம் காலை வெளியே சென்ற விஷ்ணு பிரியா வீடு திரும்ப-வில்லை. விஷ்ணு பிரியாவின் தாய் பத்மாவதி புகாரின்படி, கவுந்-தப்பாடி போலீசார் தேடி வருகின்றனர்.