ADDED : ஆக 19, 2024 02:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் மாலை மழைக்கான அறிகுறி தென்பட்டது. எந்த நேரத்திலும் மழை பெய்ய கூடும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை பெய்யவில்லை.
இதேபோல் மாவட்டத்திலும் மழை எங்கும் பெய்யவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று பகல் பொழுதில் வெயில் சுட்டெரித்தது. 35 டிகிரி செல்சியசாகவும், 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருந்தது. கொளுத்திய வெப்பத்தால் பெரும்பாலானோர் வீடுகளில் முடங்கினர்.

