/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
/
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
மாமனாரை கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய மருமகன்
ADDED : ஜூலை 04, 2024 08:45 AM
காங்கேயம் : காங்கேயம் அருகே குடும்ப பிரச்னையில் மாம-னாரை கத்தியால் குத்தி விட்டு, மருமகன் தப்பி-யோடினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே பச்சா-பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி, 59. சிவன்-மலை சுப்ரமணியசாமி கோவிலில் ஊழியராக பணிபுரிகிறார். வேலுசாமியின் மகள் நிவேதா-விற்கும், 28, வள்ளியரச்சல் பகுதியில் உள்ள பிர-பாகரன், 38, என்பவருக்கும், 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு, 10 வயதில் ராஜசூர்யா என்ற மகன் உள்ளார்.
பிரபாகரனுக்கு குடி பழக்கம் இருந்து வந்த நிலையில், சில ஆண்டுகளாக நிவேதா, பிரபா-கரன் இடையே தகராறு இருந்துள்ளது.
இந்நி-லையில், கடந்த சில மாதங்களாக அவரது மக-னுடன் தந்தை வீட்டில் நிவேதா வசித்து வந்-துள்ளார். நேற்று காலை, 8:30 மணிக்கு மாமனார் வீட்டிற்கு சென்ற பிரபாகரன், மனைவியை தன்-னுடன் அனுப்பி வைக்க கோரி தகராறில் ஈடுபட்-டுள்ளார். குடி பழக்கத்தை கைவிட்டால் மட்டுமே, மகள் வருவார் என வேலுசாமி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பிரபா-கரன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வேலுசாமியின் கழுத்தில் சரமாரியாக குத்தி-யுள்ளார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனும-தித்தனர்.தலைமறைவான பிரபாகரனை காங்கேயம் போலீசார் தேடி வருகின்றனர்.