/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு
/
தம்பி இறந்த சோகத்தில் அண்ணன் விபரீத முடிவு
ADDED : ஆக 30, 2024 04:12 AM
பவானி: பெருந்துறை அருகே துடுப்பதியை சேர்ந்தவர் ராஜா, 65; அம்மா-பேட்டை அருகே பூதப்பாடியில் தங்கி, ஒரு இறைச்சி கடையில் வறுவல் மாஸ்டராக வேலை பார்த்தார்.
இவரது தம்பி குமாரபா-ளையத்தை சேர்ந்த முருகன், சில தினங்களுக்கு முன் உடல் நலக்-குறைவால் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து காணப்-பட்ட ராஜா, நெருஞ்சிப்பேட்டை கதவணை மின் நிலைய பாலத்-துக்கு நேற்று வந்தார். பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் குதித்தார். அம்மாபேட்டை போலீசார் மீனவர்கள் உதவியுடன் ராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். மாலையில் அவரது உடலை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ராஜாவுக்கு விஜயா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர்.

