ADDED : ஜூலை 20, 2024 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி : கவுந்தப்பாடி அருகே சிறுவலுார் ரோட்டை சேர்ந்த சரவணக்-குமார் மனைவி சுபாஷினி, 26; திருமணமாகி ஐந்து ஆண்டு ஆகி-றது. ஈரோட்டில் ஒரு துணிக்கடையில் வேலை செய்தார். குழந்தை இல்லாததால் மனவேதனையில் இருந்தார். இந்நி-லையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டார்.
அவரின் தாய் ஈஸ்வரி கொடுத்த புகாரின்படி கவுந்தப்பாடி போலீசார் விசாரிக்கின்றனர். வீட்டில் சோதனை செய்ததில் சுபாஷினி எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அதில் 'குழந்தை இல்லாத விரக்தியில், துாக்கு மாட்டி தற்-கொலை செய்து கொள்கிறேன்' என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.