/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளில் கொசு பெருக்கத்தால் டெங்கு அச்சம்
/
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளில் கொசு பெருக்கத்தால் டெங்கு அச்சம்
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளில் கொசு பெருக்கத்தால் டெங்கு அச்சம்
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளில் கொசு பெருக்கத்தால் டெங்கு அச்சம்
ADDED : செப் 15, 2024 01:09 AM
நகராட்சியை ஒட்டிய ஊராட்சிகளில்
கொசு பெருக்கத்தால் டெங்கு அச்சம்
பவானிசாகர், செப். 15-
பவானிசாகர் ஒன்றிய ஊராட்சிகளில், கொசு மருந்து அடிக்காததால், எண்ணிக்கை அதிகரித்து பொதுமக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
பவானிசாகர் ஒன்றியம் மாதம்பாளையம், நொச்சிக்குட்டை ஆகிய ஊராட்சிகள், புன்செய்புளியம்பட்டி நகராட்சியை ஒட்டியுள்ளது. இரண்டு ஆண்டுகளில் பெரும்பாலான விவசாய நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறியுள்ளன. புதிதாக உருவான குடியிருப்புகளில், ஊராட்சி நிர்வாகம் முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை என புகார் உள்ளது.
தற்போது பருவநிலை மாறி, பகலில் புழுக்கமும், இரவில் குளுமையும் நிலவும் குழப்பமான சூழலில், மழையும் அவ்வப்போது பெய்வதால், கொசுக்களின் பெருக்கம் மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த ஊராட்சி பகுதிகளில் பல மாதங்களாக கொசு மருந்து அடிக்காததால், இரவு, பகல் எந்நேரமும் கொசுக்கடி உள்ளது. இதனால் கொசுக்களால் பரவக்கூடிய டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படக்கூடுமென மக்கள் அஞ்சுகின்றனர். பவானிசாகர் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் முறையாக கொசு மருந்து தெளிக்க கோரிக்கை எழுந்துள்ளது.