/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பவானி செல்லியாண்டியம்மன் கோவில் விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சேறு பூசி நேர்த்திக்கடன்

ADDED : மார் 06, 2025 03:50 AM
பவானி: பவானி செல்லியாண்டியம்மன் கோவில் திருவிழாவில், ஆயிரத்-துக்கும் மேற்பட்ட பக்தர்கள் உடலில் சேறு பூசி நேற்று ஊர்வல-மாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் பவானியில் பிரசித்தி பெற்ற செல்லியாண்டி-யம்மன் கோவிலில் நடப்பாண்டு விழாவையொட்டி, நேற்று முன்-தினம் பக்தர்களே கருவறைக்குள் சென்று, மூலவர் சிலைக்கு அபி-ஷேகம் செய்யும் நிகழ்வு நடந்தது.
இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர் கருவறைக்குச் சென்று அம்மன் சிலைக்கு பால் ஊற்றியும், புனித நீர் ஊற்றியும் வழிபட்டனர். இந்நிலையில் முக்கிய நிகழ்வாக சேறு பூசும் திருவிழா நேற்று நடந்தது. காலை, 11:௦௦ மணிக்கு அம்மன் அழைக்கும் நிகழ்ச்சிக்காக, கோவிலில் இருந்து படைக்கலங்களுடன், புது பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள எல்லை மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சிறப்பு பூஜை முடித்து அம்மன் அழைப்பு துவங்கியது. இந்த ஊர்வலத்தின் போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்கள் உடலில் சேறு பூசியும், வண்ணப்பொடி பூசியும், காய்கறி மாலை அணிந்தும் சென்றனர். இதனால் பவானி நகரில் போக்கு-வரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
திருவிழாவில் ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரி-சனம் செய்தனர். தொடர்ந்து இரவில் அக்னி கரகம் எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.