/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு குறித்த பயிற்சி
/
விவசாயிகளுக்கு மண்புழு வளர்ப்பு குறித்த பயிற்சி
ADDED : ஆக 08, 2024 01:39 AM
ஈரோடு, ஈரோடு வட்டார வேளாண் துறை சார்பில், கூரப்பாளையம் அடுத்த மூலக்கரையில் மண் புழு வளர்ப்பு, சூரிய ஆற்றலை பயன்படுத்துதல் குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.
ஈரோடு வட்டார வேளாண் அலுவலர் ராம்ஜிவன்யா தலைமையில், மண் புழு வளர்ப்பு பயிற்சி தரப்பட்டது. பேராசிரியர் அருண்குமார், மண்புழு உர பயன்கள், பயிர்களுக்கு மண்புழு உர அளவு, தரம், வளர்ப்பு முறைகள் குறித்து பயிற்சி வழங்கினார். முன்னோடி விவசாயி ரமேஷ், மண்புழு உயர் தயாரிக்கும் முறைகள், உரக்கூடம், மண்புழு உரம் சேமிப்பு முறைகள் குறித்து விளக்கினார். கனரா வங்கி சார்பில் பரமசிவம், உழவர்களுக்கு வழங்கப்படும் கடன் வசதி, பயிர் காப்பீடு செய்வதன் அவசியம் பற்றி பேசினார்.
பயிர் காப்பீடு அலுவலர் காமராஜ், பயிர் காப்பீடு செய்வதன் அவசியம், பயிர்களின் பிரிமிய தொகை பற்றி பேசினார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் கிருத்திகா, உதவி வேளாண் அலுவலர் கார்த்திகேயன் உட்பட பலர் பேசினர்.