/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விநாயகர் சதுர்த்தி விழா தாசில்தார் ஆலோசனை
/
விநாயகர் சதுர்த்தி விழா தாசில்தார் ஆலோசனை
ADDED : ஆக 30, 2024 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் சதுர்த்தி விழா
தாசில்தார் ஆலோசனை
காங்கேயம், ஆக. 30-
காங்கேயத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில், பின்பற்ற வேண்டிய வழிமுறை, சிலைகளை கொண்டு செல்லும் சாலைகளின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு, நேரம் உள்ளிட்டவை குறித்த ஆலோசனை கூட்டம், தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மயில்சாமி தலைமையில் நடந்தது. காங்கேயம் டி.எஸ்.பி., மாயவன் முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் மற்றும் பல்வேறு கட்சி, அமைப்பினர் பங்கேற்றனர். காவல்துறை தரப்பில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறை குறித்து விளக்கப்பட்டது.

