ADDED : ஜன 20, 2024 07:36 AM
சென்னிமலை : காலிங்கராயன் கால்வாயை பாசனத்துக்கு அர்ப்பணித்த, காலிங்கராயருக்கு தை ஐந்தாம் நாள் விழாவையொட்டி வெள்ளோட்டில் அமைந்துள்ள அவர் சிலைக்கு, அவர் சார்ந்த குல மக்களின் சார்பில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துப்பட்டது.
சாத்தந்தை குல மக்கள் நற்பணி மன்றத் தலைவர் முத்துசாமி, சாத்தந்தை குல நலச்சங்கம் தலைவர் சோமசுந்தரம், முன்னாள் எம்.எல்.ஏ., திருப்பூர் குணசேகரன் மற்றும் மன்ற சாத்தந்தை குல மக்கள் கலந்து கொண்டனர்.
* தி.மு.க., சார்பாக சென்னிமலை வடக்கு ஒன்றிய செயலாளர் செங்கோட்டையன் தலைமையிலும், பா.ஜ., சார்பில் மாநில விவசாய அணிதலைவர் நாகராஜ் தலைமையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
* பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையத்தில் உள்ள மணிமண்டபத்தில், காலிங்கராயன் சிலைக்கு, வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், கணேசமூர்த்தி, அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம் உள்ளிட்ட பலர் மரியாதை செலுத்தினர்.