ADDED : ஏப் 01, 2025 02:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ.கம்யூ.,கிளை மாநாடு
சென்னிமலை,இ.கம்யூ., சென்னிமலை ஒன்றியம் மேலப்பாளையம் கிளை மாநாடு நடந்தது. செயலாளர் மூர்த்தி, பொருளாளர் ரவி தலைமை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர் பொன்னுச்சாமி பேசினார். இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்த அனைவருக்கும் வழங்க வேண்டும். மேலப்பாளையம் பகுதியில் வாரம் ஒருமுறை அனைத்து இணைப்புக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். இதில் மேலப்பாளையம் கிளை செயலாளராக தேவிப்பிரியா, துணை செயலாளராக மூர்த்தி, பொருளாளராக ரவி தேர்வு செய்யப்பட்டனர்.

