ADDED : ஏப் 04, 2025 01:24 AM
கோவிலில்பக்தர்கள் 'ஷாக்'
ஈரோடு:ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. பக்தர்கள் கோவிலுக்குள் வருவதை முறைப்படுத்த கோவில் நுழைவு பகுதியில் பேரி கார்டு (இரும்பு தடுப்பு) வைக்கப்பட்டுள்ளது.
நேற்று மதியம், 12;25 மணியளவில் ஏராளமான பக்தர்கள் கம்பத்துக்கு புனிதநீர் ஊற்ற, தரிசிக்க கோவில் முன் காத்திருந்தனர். அப்போது சாரல் மழை பெய்து நின்றிருந்தது. பக்தர்கள் சிலர் பேரிகார்டில் கை வைத்தபோது நொடிப்பொழுதில் கையை வேகமாக எடுத்தனர். பேரிகார்டில் ஷாக் அடித்ததே இதற்கு காரணம்.
இதனால் ஒரு சிலர் பயத்தில் கூச்சலிட்டனர். கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக எலக்ட்ரீசியஷனை அழைத்து சரி செய்ததால், பக்தர்கள் தடையின்றி தரிசனம் செய்து சென்றனர்.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் அஞ்சுகம் கூறியதாவது: மாநகரில் பெய்த மழையால், டிரான்ஸ்பார்மரில் மழை நீர் தெறித்து அதில் பழுது ஏற்பட்டது. அப்போது எல்.இ.டி., பல்புகள் செயல் இழந்தன.
இதனால் பேரிகார்டில் 'எர்த்' ஏற்பட்டுள்ளது. உடனடியாக எலக்ட்ரீசியனை வரவழைத்து பரிசோதித்து விட்டோம். கூடுதலாக மேலும் ஒரு எலக்ட்ரீசியனை பணிக்கு அழைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

