நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வக்கீல் தற்கொலை
சத்தியமங்கலம்:சத்தியமங்கலம் அருகேயுள்ள கூத்தனுார் ரோடு, கண்ணப்பன் லே-அவுட்டை சேர்ந்தவர் சுசீந்தர், 38; வக்கீல். இவரது மனைவி பிரபாவதி. உக்கரம் அரசு மருத்துவமனை டாக்டர். இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் ஏற்பட்ட தகராறில், சுசீந்தர் வீட்டில் சேலையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சத்தியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

