ADDED : மே 29, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பு.புளியம்பட்டி, புன்செய்புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சுப்புரத்தினம், கடந்த வாரம் நீலகிரி மாவட்டம், மசினகுடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பவானிசாகர் இன்ஸ்பெக்டர் அன்னம், கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் கீதாவை, புன்செய் புளியம்பட்டிக்கு நியமனம் செய்யப்பட்டார். நேற்று, புன்செய்புளியம்பட்டி இன்ஸ்பெக்டராக கீதா பொறுப்பேற்றுக் கொண் டார். அவருக்கு சக போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.