ADDED : ஜூன் 04, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை, சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் அர்ச்சகர்களுக்கு, ஜோதிட ஆசிரியர் டாக்டர் பராசரி அய்யப்ப சர்மாவால் கணித்து தயாரிக்கப்பட்ட, மாநில ஆதிசைவ சிவாச்சாரியார் கூட்டமைப்பு சார்பாக வெளியிடப்பட்ட 'சிவாச்சாரியார் பஞ்சாங்கம்' என்ற திருக்கணித பஞ்சாங்கம்,
சென்னிமலை வட்டார ஆதி சைவ சிவாச்சாரியார் சங்க தலைவர் சிவஸ்ரீ மதிகுருக்கள் தலைமையில், அனைத்து சிவாச்சாரியார்களுக்கும் நேற்று இலவசமாக வழங்கப்பட்டது.இதில் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் அர்சகர்கள், ஸ்தானீகம் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.