நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, பெருந்துறை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்றும் காலை முதலே வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் மாலை, 4:30 மணியளவில் பலத்த காற்று, இடியுடன் மழை பெய்ய தொடங்கியது. ஒரு மணி நேரம் வரை கனமழையாக கொட்டி தீர்த்தது.
இதனால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. பள்ளி மற்றும் கல்லுாரி விடும் நேரத்தில் பெய்ததால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் சிரமப்பட்டனர்.* ஈரோடு மாநகரில் நேற்று வெயில் தாக்கம் சற்று குறைவாகவே இருந்தது. மதியம், 3:10 மணிக்கு லேசான இடியுடன் சாரல் மழை துவங்கி, வேகமெடுக்க ஆரம்பித்தது. ஆனால், ௧௦ நிமிடங்களில் நின்று விட்டது. இதேபோல மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.