நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் தாராபுரத்தை அடுத்த சின்னக்காம்பாளையத்தில், 'நலன் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
இதில் பல்வேறு மருத்துவம் சார்ந்த பரிசோதனைகளை சுகாதார துறையினர் அளித்தனர். அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி பங்கேற்றனர். மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அமைச்சர் சாமிநாதன், நவீன மூன்று சக்கர வாகனம் வழங்கினார். முகாமில் அதிகாரிகள், தி.மு.க., ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், சின்னக்கம்பாளையம் செயலாளர் பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.