* ஈரோடு மாவட்டம் பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 322 காய்கள் வரத்தானது. ஒரு காய், 18.29 - 35.16 ரூபாய்க்கு விற்றது. நெல், 45 மூட்டை வரத்தாகி கிலோ, 16.94 - 21.54 ரூபாய்; நிலக்கடலை, 132 மூட்டை வரத்தாகி, கிலோ, 65.69 - 73.10 ரூபாய்; மக்காச்சோளம், 50 மூட்டை வரத்தாகி கிலோ, 19.31 - 19.51 ரூபாய்க்கு விற்றது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 4,140 தேங்காய் வரத்தாகி, காய் ஒன்று, 57 முதல் 68 ரூபாய், 20 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ 191 முதல் 227 ரூபாய்; 16 மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி கிலோ, 19 ரூபாய்; 427 மூட்டை பருத்தி வரத்தாகி கிலோ, 70 முதல் 75 ரூபாய்க்கும் விலை போனது.
* கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 6,003 தேங்காய் வரத்தானது. ஒரு கிலோ தேங்காய், 55.65 - 78.79 ரூபாய்க்கு விலை போனது. கொப்பரை தேங்காய், 272 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 208.89 - 219 ரூபாய்; இரண்டாம் தரம், 140 - 210.39 ரூபாய்க்கும் விற்றது.
* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 520 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 205.19 - 220.89 ரூபாய், இரண்டாம் தரம், 14௨ - 216.55 ரூபாய் வரை விலை போனது.
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த பாக்கு(பச்சை காய்), ஏலத்தில், குறைந்த பட்சம் (கிலோ), 45 ரூபாய், அதிகபட்சம், 58 ரூபாய்க்கும் விற்பனையானது. பாக்கு (பழம்), குறைந்த விலை (கிலோ), 65 ரூபாய், அதிகபட்சம், 74 ரூபாய்க்கு விலை போனது. வரத்தான, 4,020 கிலோ பாக்கு, 2.93 லட்சம் ரூபாய்க்கு விற்றது.
* ஈரோடு மாநகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று மாலை வரை ஜவுளி சந்தை நடந்தது. மிகவும் குறைந்த எண்ணிக்கையில் ஜவுளி உற்பத்தியாளர், விற்பனையாளர் கடை போட்டனர். தீபாவளி பண்டிகை முடிந்த முதல் வாரம் என்பதால், வியாபாரம் மந்தமாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

