நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, அம்மாபேட்டையை அடுத்த முகாசிபுதுாரை சேர்ந்த கூலி தொழிலாளி மூர்த்தி, 44; குடிசை வீட்டில் வசித்து வருகிறார். நேற்று குடிசை திடீரென தீப்பிடித்து எரிந்தது. அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
ஆனாலும், குடிசை எரிந்து சாம்பலாகி விட்டது. வீட்டில் இருந்த, 30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து விட்டதாக தெரிகிறது. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

